• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /திருச்சி : ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு

திருச்சி : ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 03, 2026, 03:23 PM IST|Updated: Oct 03, 2026, 03:31 PM IST
joinshare
திருச்சி : ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு
Image Credit: Trichy pension news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

2

Explainer: சிலிக்கான் வேலியை அதிர வைத்த ரகசிய ‘Me Too' ஆவணம்! பெண்களுக்கு இடையில் விஸ்பர் நெட்வொர்க்!

3

மதுராந்தகம், தாராபுரம்: நாளை மாலை முதல் அமலுக்கு வரும் விதிகள் என்னென்ன?

4

திருச்சி : ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு

5

இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் மண்டல இணை இயக்குநர் அவர்களால், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் எதிர்வரும் 13.11.2026 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.  

மேலும் படிக்க | திருச்சி : வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் ஆபத்து? அரசின் முக்கிய எச்சரிக்கை

மனுக்கள் அனுப்புவதற்கான காலக்கெடு:

ஓய்வூதியர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளைக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்குக் குறிப்பிட்ட சில விபரக் குறிப்புகளுடன் உரிய மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.10.2026 ஆகும். இறுதி நாளுக்குள் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் ஓய்வூதியர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

மேலும் படிக்க | திருச்சி : தாய்மாமன் தங்க மோதிரம் எந்தெந்த மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது

மனுவில் இடம்பெற வேண்டிய கட்டாய விவரங்கள்:

ஓய்வூதியர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது கீழ்க்கண்ட விதிமுறைகளையும் விவரங்களையும் கண்டிப்பாகப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்:  

சமர்ப்பிக்கப்படும் மனுவின் மீது "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனு" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக இரு நகல்களாக அனுப்பி வைக்க வேண்டும்.  

மனுதாரரான ஓய்வூதியரின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்; ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவராக இருந்தால், அவர்களுடனான உறவுமுறை விவரம் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.  

ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்களாக இருந்தால், அது சம்பந்தமான விவரங்களோடு சேர்த்து ஓய்வூதிய புத்தக எண் (PPO Number) மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் பெயர் ஆகியவை மனுவில் இடம்பெற வேண்டும்.  

ஓய்வூதியப் முன்மொழிவு சென்னை, மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால், அது தொடர்பான விரிவான விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.  

ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டுமே தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் அக்கோரிக்கையின் விவரம் மனுவில் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும்.  

ஓய்வூதியர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய துறை சார்ந்த அலுவலர் மற்றும் அந்த அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.  

விண்ணப்பிப்பதற்கான தகுதி வரம்பு:

இக்குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, திருச்சி மாவட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த முகாமிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்பு:

அரசுத் துறைகளிலிருந்து ஓய்வூதியப் முன்மொழிவு அனுப்புவதில் ஏற்படும் நிர்வாகத் தாமதங்கள் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை நேரடியாகத் தீர்ப்பதே இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.  

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரடியாக விவாதித்து குறைகளைக் களையவும், விரைந்து தீர்வு காணவும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்களும் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு பதிலளிக்க உள்ளார்கள்.  

ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்:

எனவே, 13.11.2026 அன்று நடைபெறவுள்ள ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, 20.10.2026-க்குள் ஓய்வூதியர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முழுமையான ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு முன்னதாக மனுக்கள் அளித்துள்ள ஓய்வூதியர்கள் மட்டுமே 13.11.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் தெளிவுபடுத்தியுள்ளார். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu