5 நாள் வேலை வாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரை (திங்கள் டூ புதன்) என மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலைநிறுத்தக் காலத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும், இன்று மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறையாகும். அதேநேரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளையும் பொது விடுமுறையாகும். ஆனால், தொடர் விடுமுறை என்பதால் நாளைய தினம் பொதுத்துறை வங்கிகளும், சில கிராமப்புற வங்கிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பல வங்கிகள் இந்த தொடர் விடுமுறை காலகட்டத்தில் ஏடிஎம் கட்டணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு வங்கியின் ஏடிஎம்கள் மூலமாகவும் செய்யப்படும். பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வாடிக்கையாளர் ஏடிஎம்கள், YONO, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் வாட்ஸ்அப் பேங்கிங் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.
Banking doesn’t stop. Your needs don’t have to wait.
Even during the proposed strike period, SBI continues to keep essential banking services accessible through ATMs, YONO, Internet Banking, Mobile Banking, WhatsApp Banking and 24×7 Contact Centre services.
For Seamless… pic.twitter.com/P1FTsjtSws— State Bank of India (@TheOfficialSBI) September 24, 2026
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமின்றி பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகள் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
Banking that stays convenient, whenever you need it.
ATM withdrawal charges are waived from 28–30 September 2026 at ATMs across the country.
For added convenience, use Mobile Banking, Internet Banking and WhatsApp Banking for your everyday banking needs.@DFS_India… pic.twitter.com/rjfTLmMx5a— Punjab National Bank (@pnbindia) September 25, 2026
வழக்கமாக ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி குறிப்பிட்ட இலவசப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம், இந்த 3 நாட்களில் எந்த வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படாது.
Even during strike, you can continue to access essential banking services through ATMs, digital channels and Business Correspondent networks. ATM charges are waived on transactions through ATMs of any bank from 28th to 30th September 2026. Public Sector Banks and Regional Rural… pic.twitter.com/LvBNCzz2hS
— Union Bank of India (@UnionBankTweets) September 25, 2026
வங்கி கிளைகளின் பணிகள் பாதிக்கப்பட்டாலும் ஏடிஎம்கள், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ, என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் போன்ற இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகள் தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் அவசர வங்கிப் பணிகளை டிஜிட்டல் முறையிலோ அல்லது சிஎஸ்பி மையங்கள் மூலமாகவோ மேற்கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.