IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்..... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
IGNOU Recruitment 2026: IGNOU வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பிக்கும் செயல்முறை அக்டோபர் 3, 2026 அன்று தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 2, 2026 வரை இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
IGNOU Recruitment 2026: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (IGNOU) பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. அப்பல்கலைக்கழகம் மூலம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை (non-teaching staff) பணியமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
IGNOU வேலைவாய்ப்பு
IGNOU வெளியிட்டுள்ள இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பிக்கும் செயல்முறை அக்டோபர் 3, 2026 அன்று தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 2, 2026 வரை இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். IGNOU ஆட்சேர்ப்பு குறித்த அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
IGNOU Recruitment 2026: பணியிட விவரங்கள்
IGNOU அறிவித்துள்ள 14 காலிப்பணியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
உதவி இயக்குநர் (Assistant Director) பணிக்கு 2 இடங்களும், தொழில்நுட்ப மேலாளர் (Technical Manager) பணிக்கு 4 இடங்களும், தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு 8 இடங்களும் உள்ளன.
| பிரிவு | ணியிட விவரங்கள் |
| 2 உதவி இயக்குநர் பணியிடங்களில் அடங்குபவை | உதவி இயக்குநர் (LMS) - 1 மற்றும் உதவி இயக்குநர் (Networking) - 1 |
| 8 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் அடங்குபவை | தொழில்நுட்ப உதவியாளர் (LMS) - 2, தொழில்நுட்ப உதவியாளர் (Networking) - 2, தொழில்நுட்ப உதவியாளர் (Animator) - 1, தொழில்நுட்ப உதவியாளர் (Game Designer) - 1, தொழில்நுட்ப உதவியாளர் (Virtual Reality/Augmented Reality Application Development) - 1 மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் (Artificial Intelligence) - 1. |
| 4 தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களில் அடங்குபவை | தொழில்நுட்ப மேலாளர் (LMS) - 1, தொழில்நுட்ப மேலாளர் (Networking) - 1, தொழில்நுட்ப மேலாளர் (Virtual Reality/Augmented Reality Application Development) - 1 மற்றும் தொழில்நுட்ப மேலாளர் (Artificial Intelligence) - 1 |
மேலும் படிக்க | ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை.. தமிழக அரசின் அறிவிப்பு.. யாருக்கெல்லாம்?
IGNOU Recruitment 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு
- இப்பணியிடங்களுக்கான இணையவழி விண்ணப்பச் செயல்முறை அக்டோபர் 3 அன்று தொடங்கியது.
- விண்ண்ப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 2.
- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப இணைப்பு செயல்பாட்டிற்கு வந்த பிறகு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அல்லது அதற்கு முன்னதாகவே IGNOU-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் பதிவை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.
IGNOU Recruitment 2026: தேவையான தகுதிகள்
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் BE (CS/IT), B.Tech (CS/IT), M.Sc (CS/IT) அல்லது MCA பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரத்துடன் (grade) முடித்திருக்க வேண்டும்.
- மேலும், குறிப்பிட்ட பணியிடத்தைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
IGNOU Recruitment 2026: வயது வரம்பு
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின் அடிப்படையில், அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- உதவி இயக்குநர் (Assistant Director) பணிக்கு 48 ஆண்டுகள்,
- தொழில்நுட்ப மேலாளர் (Technical Manager) பணிக்கு 42 ஆண்டுகள் மற்றும்
- தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு 37 ஆண்டுகள்.
- இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
IGNOU Recruitment 2026: சம்பள விவரங்கள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (CBT), எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பணியிடத்தைப் பொறுத்து மாதச் சம்பளம் ₹9,300 முதல் ₹39,100 வரை இருக்கும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு ₹4,800 முதல் ₹5,400 வரையிலான தர ஊதியம் (grade pay) மற்றும் பிற சலுகைகள், படிகள் வழங்கப்படும்.
IGNOU Recruitment 2026: விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, விண்ணப்பதாரர்கள் தங்கள் பிரிவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு/OBC (NCL)/EWS பிரிவினருக்குக் கட்டணம் ₹1,000 ஆகவும், SC/ST/PH/முன்னாள் ராணுவத்தினர்/பெண் விண்ணப்பதாரர்களுக்கு ₹500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தின் அச்சிட்ட நகலை (Hard copy) இங்கு அனுப்ப வேண்டும்
இணையவழியில் வெற்றிகரமாக விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தாங்கள் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அச்சிட்ட நகலையும், அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பின்வரும் முகவரிக்கு நவம்பர் 12-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்:
Recruitment Cell,
Room No. 13,
Block No. 7,
Indira Gandhi National Open University (IGNOU),
Maidan Garhi,
New Delhi - 110068