உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் AI போட்டியில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்தியாவிலும் AI கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன. இதற்காக பல்வேறு மாநிலங்கள் தனித்துவமான AI ஹப்கள், ஆராய்ச்சி மையங்கள், ஸ்மார்ட் டவுன்ஷிப்கள் என அடுத்த தலைமுறை தொழில்நுட்ப கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன. அந்த பட்டியலில் தற்போது பெங்களூரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும் Bharat1.AI, மனிதர்களை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு சூழலை உருவாக்கும் நோக்கில் புதிய AI நகரத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. தொழில்நுட்பம் மட்டுமல்ல... மனிதர்களுடன் இணைந்து, பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் செயல்படும் AI