நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வழக்கறிஞர் பிரியதர்ஷினி, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மற்றும் வஹிதா விவகாரம் குறித்து பேசினார். மேலும், காதலுக்கும் ஈர்ப்புக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து நெருக்கம் காட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஏமாற்றும் உள்நோக்கத்துடன் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுவதும், பரஸ்பர சம்மதத்துடன் பழகிய பின் ஏற்படும் இயல்பான காதல் முறிவும் ஒன்றல்ல என்று அவர் விளக்கினார். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் விசாரணையின்போது முக்கியத் தடயங்களாக மாறும். உண்மை நிலை எதுவாக இருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் விளைவுகள் தீர்மானிக்கப்படும் என்று அவர்