சென்னையில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணிகள் எளிதாகச் சென்று வரவும் 220 மின்சாரப் குறு பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது பேருந்து கொள்முதல் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆயிரம் தாழ்தள குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் 220 மினி குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரத்து செய்துள்ளது.
இதில், ஆயிரம் மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளி நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 220 குறு பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு எந்த நிறுவனமும் முன்வராததால் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.