நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் நடித்தனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரித்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் 209 கோடியே 10 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது. இந்தியாவில் 112 கோடியே 10