தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தயாராகிறது தூத்துக்குடி. ஏற்கெனவே துறைமுகம், ஏற்றுமதி, உற்பத்தித் தொழில்கள் எனப் பல்வேறு துறைகளில் கவனம் ஈர்த்து வரும் இந்த நகரத்தில், தற்போது இரண்டு புதிய தொழிற்பூங்காக்களை உருவாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அதன் பன்னோக்குப் போக்குவரத்து இணைப்புகள்.
கடல்வழிப் போக்குவரத்துக்கு துறைமுகமும், வான்வழிப் பயணத்துக்கு விமான நிலையமும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளும் இருப்பதால், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு இந்தப் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கெனவே மின்சார வாகன உற்பத்தி, கப்பல் கட்டுமானம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு