தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானது குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எந்த இடத்திலும் யாராவது ஒருவர் இந்த மாதிரி தவறு செய்திருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யாராக, எந்த கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் முதலில் கைது செய்யப்படுவார். இப்போது தவெகவில் எங்கேயாவது தெரியாமல் அந்த மாவட்டத்திலயோ, ஒன்றியத்திலயோ எங்கயாவது சேர்ந்திருந்தா உடனடியாக கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்கேயும் மூடி மறைக்கிறதுக்காக இல்லை. எந்த விதத்திலும் மெத்தம்பெட்டமைன் எப்ப வந்தது? இந்த அஞ்சு வருஷமாதான் வந்துள்ளது. ஜாபர் சாதிக் என்ற நபர் வெளியே வந்தாரோ, அன்று தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் இவ்வளவு சர்குலேஷன், மெத்தம்பெட்டமைன் இவ்வளவு, சூடோபெட்ரின்லாம் இவ்வளவு தயாரிப்பு நடந்ததே தமிழ்நாட்டில்