உடலின் மிக முக்கிய 5 உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை எப்படி பாதுகாக்க வேண்டுமென்பதை பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் விளக்கியுள்ளார்.
"உடலின் முக்கிய உறுப்புகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சரியாக செயல்பட வேண்டுமானால் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியமாகும். குடல் சுத்தமாக இருந்தால் இதயம் அதன் வேலையையும், சிறுநீரகம் அதன் வேலையையும், மற்று முக்கிய உறுப்புகள் அவற்றின் வேலைகளையும் சரியாகச் செய்யும். குடல் சுத்தமாக இல்லாவிட்டால் இந்த அனைத்து உறுப்புகளின் வேலைகளும் பாதிக்கப்படும். உடலை சுத்தமாக வைப்பதற்கும், உடலை சுத்தமாக வைப்பதற்கும் மருத்துவத்தில் தனித்தனி வழிமுறைகள் உள்ளன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இதற்கான வழிமுறைகள் மாறுபடுகின்றன.
வயிற்றை சுத்தம் செய்வதற்கான பல வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.