ராமேஸ்வரம்... தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை மட்டுமின்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தையும் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், ராமேஸ்வரத்திற்கு நேரடி விமானப் போக்குவரத்து வசதி இல்லாததால், பெரும்பாலான பயணிகள் சாலை அல்லது ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில், ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2025ஆம் ஆண்டு அறிவித்தது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம், மாணிக்கனேரி உள்ளிட்ட 5 இடங்கள் முதற்கட்டமாக பரிசீலிக்கப்பட்டன.
தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மாணிக்கனேரி பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான