இன்றைய காலத்தில் இளைஞர் விளையாடிக்கொண்டோ அல்லது நடனம், நடை என மேற்கொள்ளும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அதற்கு என்ன காரணம் ? என்ன செய்யலாம் என்பதற்கு பாரம்பரிய சித்த மருத்துர் செந்தில்குமார் சிறந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
"இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு சோர்வு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றினாலே இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் இளைஞர்கள் பெரியவர்கள் கூறும் எதையும் கேட்பதில்லை. காலை வேளையில் மெதுவாக எழுந்திருப்பது, பல் துலக்குவது, குளிப்பது போன்ற விஷயங்களை கூட சோம்பல் காரணமாக செய்யாமல் இருப்பது ஆகியவை இன்றைய இளைஞர்களிடம் வெகுவாக காணப்படுகின்றன. இவற்றுக்கு பெற்றோர்களே பெரிய காரணமாகிறார்கள்.
சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கங்களை கற்றுக்