அறியாத வயதில் ; புரியாத மாற்றங்களால் போராடும் இளம்பருவத்தினருக்கு பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை 'இளம் வயதில் உடலிலும், மனதிலும் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக 13 வயது முதல் இந்த மாற்றங்கள் வரத் தொடங்குகின்றன. இந்த காலகட்டத்தில் பெற்றோரிடம் குழந்தைகள் சில விஷயங்களை மறைக்கத் தொடங்குவார்கள். பெற்றோர் குழந்தைகளுக்கு நண்பர்களாக இருக்க பழக வெண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேசி அவர்களது பிரச்சனைகளை நன்றாக புரிந்துககொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால், அவர்கள் தாங்கள் நினைப்பதை பெற்றோரிடமே பகிர்வார்கள். இல்லையெனில் தவறான சகவாசத்தில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளக்கூடும். குழந்தைகள் பாதை மாறுவதற்கான சாத்தியம் 13 வயதிலெயே தொடங்குகிறது. சில பெற்றோர் இதை கவனிக்காமல் விட்டு பின் அவதிப்படுகிறார்கள். 10 வயதுக்கு மேல்