கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரின் அடிப்படையில், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் 75, 78, 79, 132 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் பிரிவான BNS 75, பாலியல் துன்புறுத்தல் தொடர்பானது. பெண்ணின் விருப்பமின்றி பாலியல் ரீதியான அணுகுமுறை, பாலியல் சலுகை கோருதல், விருப்பமின்றி ஆபாசப் படங்களைக் காட்டுதல் போன்ற செயல்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இத்தகைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பாலியல் ரீதியான கருத்துகளைத் தெரிவிக்கும் குற்றத்திற்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அடுத்ததாக BNS 78-வது பிரிவு. ஒரு பெண்ணைத்