எலும்பு பலவீனத்தை போக்கி வலிமைப்பெற..குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் எலும்பு சார்ந்த பிரச்சனைக்கு பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்குகிறார். ‘எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு ஆகியவை தற்போது மிக சாதாரணமாகிவிட்டன. எனினும், சிறு வயதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. கேல்சியம் குறைபாடு இருந்தால்தான் இது நிகழும். சரியான அளவு கேசியம் உள்ளவர்கள் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் ஒன்றும் ஆகாது. எலும்பு நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. அதை சரியாக பராமரிப்பது மிக அவசியமாகும், சிறு வயதிலிருந்தே முறையாக எண்ணெய் தேய்த்து குளிப்பது எலும்புகளை பராமரிக்க சிறந்த வழியாக உள்ளது. உடலில் வெயில் படுவதும் அவசியமாகும். அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பால், தயிர் போன்ற பால்