தூத்துக்குடியில் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பரில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட மசகான் டாக் நிறுவனம், தூத்துக்குடியில் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்ட நிலத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நிலப்பகுதியை தென்கொரியாவின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமான ஹெச்.டி. ஹூண்டாயும் தனது கப்பல் கட்டும் தளத்திற்காக பரிசீலித்து வந்தது. ஹெச்.டி. ஹூண்டாய் திட்டத்தின் மிகப்பெரிய அளவு, உலகளாவிய கப்பல் கட்டுமான திறன் மற்றும் எதிர்கால கப்பல் கட்டுமான சூழலுக்கு முக்கிய முதலீட்டாளராக இருக்கும்