Cuddalore District Recruitment News: கடலூர் மாவட்டட்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இதற்கு விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களை (உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க். இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்) நிரப்புவதற்கான நடவடிக்கை ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது. கல்வி தகுதி, விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரியில் (www.cuddalore.nic.in) கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
நிரப்பப்படவுள்ள கூடுதல் பணியிடங்கள்:
1) உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க்: Assistant cum Bench Clerk
பதவி: உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க்
காலியிடங்கள்: 01
தொகுபூதியம்: ரூ.25,000
வயது வரம்பு: 18 முதல் 42 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி
2) இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்: Junior Assistant cum Record Clerk
பதவி: இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்
காலியிடங்கள்: 01
தொகுபூதியம்: ரூ.20,000
வயது வரம்பு: 18 முதல் 42 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
3) அலுவலக உதவியாளர்: Office Assistant
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
தொகுபூதியம்: ரூ.13,000
வயது வரம்பு: 18 முதல் 42 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.312, இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கடலூர்-607001
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை இங்கே காணலாம்.