• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னை மெட்ரோவின் ஹாட்ரிக் சாதனை... பணிகளை முடித்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்!

சென்னை மெட்ரோவின் ஹாட்ரிக் சாதனை... பணிகளை முடித்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்!

Chennai Metro Rail Limited: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 3 நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 02, 2026, 01:15 PM IST|Updated: Oct 02, 2026, 01:23 PM IST
joinshare
சென்னை மெட்ரோவின் ஹாட்ரிக் சாதனை... பணிகளை முடித்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்!
Image Credit: cmrl hattrick record 3 TBM Breakthroughs in 3 Days | Image Source : X/@cmrlofficial

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

2

முகமது சிராஜுக்கு கல்தா? கௌதம் கம்பீரின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

3

புதுச்சேரி ரயில் நிலையத்தில் அட்டகாசமான மாற்றங்கள்: ‘அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் தீவிரம்

4

சென்னை மெட்ரோவின் ஹாட்ரிக் சாதனை... பணிகளை முடித்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்!

5

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Metro Rail Limited: சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டத்தில் 2 வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. அவை செயல்பாட்டில் உள்ளன. 2ஆம் கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

2ஆம் கட்ட திட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வரும் அக்டோபர் 11ஆம் தேதி பிரமதர் மோடியால் திறக்கப்படுகிறது.

மேலும் படிக்க | சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: ஒரே மாதத்தில் இரட்டிப்பான தொற்று எண்ணிக்கை

முதல் கட்ட திட்டம்

நீல நிற வழித்தடம்: சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை  (32.6 கி.மீ.,)

பச்சை நிற வழித்தடம்: பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் (22 கி.மீ.,)

2வது கட்ட திட்டம்

ஊதா நிற வழித்தடம்: மாதவரம் பால் காலனி - சிறுசேரி சிப்காட் 2 (45.8 கி.மீ.,)

ஆரஞ்சு நிற வழித்தடம்: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ.,)

சிவப்பு நிற வழித்தடம்: மாதவரம் பால் காலனி - சோழிங்கநல்லூர் (47 கி.மீ.,)

CMRL ஹாட்ரிக் சாதனை

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 3 நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் X பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதில், "இரண்டாம் கட்டத் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, மூன்றாவது வழித்தடத்தில் 'அடையாறு' சுரங்கம் தோண்டும் இயந்திரம் 915 மீட்டர் நீளத்தில் சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து ஆர்.கே.சாலை மெட்ரோ இரயில் நிலையத்தை வந்தடைந்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 3 நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை நிறைவு செய்து ஹாட்ரிக் சாதனை!
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இரண்டாம் கட்டத் திட்டத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, வழித்தடம் 3-ல் “அடையாறு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் 915… pic.twitter.com/hdPvCSV1vi

— Chennai Metro Rail (@cmrlofficial) October 1, 2026

இந்த சுரங்கம் தோண்டும் பணி கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டு 277 நாட்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்டப் பணிகளின் கீழ் தொடர்ந்து மூன்று நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | PM Yasasvi மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: எப்படி விண்ணப்பிப்பது? சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

29 செப்டம்பர் 3வது வழித்தடத்தில் 'காவேரி' சுரங்கம் தோண்டும் இயந்திரம் கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
30 செப்டம்பர்5வது வழித்தடத்தில் 'மருதம்' சுரங்கம் தோண்டும் இயந்திரம் வில்லிவாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
1 அக்டோபர்3வது வழித்தடத்தில் 'அடையாறு' சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆர்.கே.சாலை மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

பயன்படுத்தப்படும் 8 இயந்திரங்கள்

3வது வழித்தடத்தில் கெல்லிஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதை பகுதியின் கட்டுமானப் பணிகள் L&T நிறுவனத்தால் 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

'பவானி, 'அடையாறு' இயந்திரங்களின் பணி

ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஆர்.கே.சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள், 'பவானி, 'அடையாறு' ஆகிய இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன.

இதில் Upline பாதையில் 'பவானி' சுரங்கம் தோண்டும் இயந்திரம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அன்று தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், Downline பாதையில் 'அடையாறு' சுரங்கம் தோண்டும் இயந்திரம் நேற்று (அக். 1) தனது பணியை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 - 13 மீட்டர் ஆழத்தில்...

இப்பணியின் போது, 'அடையாறு' சுரங்கம் தோண்டும் இயந்திரம் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பீட்டர்ஸ் பாலம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம், ஆந்திரா பள்ளி மற்றும் பல்வேறு கடைகள் உட்பட பல முக்கிய மற்றும் நெரிசலான கட்டடங்களுக்கு அடியில், சுமார் 9 முதல் 13 மீட்டர் ஆழத்தில் களிமண் கலந்த மணல் பரப்பில் பாதுகாப்பாகச் சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த X பதிவில், "நகர்ப்புற நெரிசல் மற்றும் வழித்தடத்தில் பல்வேறு கட்டடங்கள் நிறைந்த சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், தரைப்பகுதியில் எவ்விதப் பாதிப்போ அல்லது சுற்றியுள்ள கட்டடங்களுக்கு எந்தவொரு சேதமோ இன்றி இச்சாதனை வெற்றிகரமாக எட்டப்பட்டது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திருமங்கலத்தில் மெட்ரோவுக்கு புது ரூட்! என்ன ஸ்பெஷல்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai