சென்னை மெட்ரோவின் அடுத்த கட்ட வளர்ச்சியில், திருமங்கலம் மெட்ரோ நிலையம், புதிய அடையாளத்தைப் பெற உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், திருமங்கலத்தில் 12 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், மெட்ரோ ரயில் பாதை இந்த அடுக்கு மாடிக் கட்டடத்தின் வழியாகவே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. பொதுவாக மெட்ரோ ரயில் பாதைகள், கட்டிடங்களுக்கு வெளியே அல்லது தனிப்பட்ட கட்டமைப்புகள் வழியாக அமைக்கப்படும். ஆனால், திருமங்கலத்தில் வணிக வளாகமும், மெட்ரோ கட்டமைப்பும், ஒருங்கிணைந்த வகையில் உருவாக்கப்பட உள்ளன.
அதன்படி, 12 மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய வணிக வளாகத்தின் ஒரு பகுதியை ஊடுருவிச் செல்லும் வகையில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.