ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை
ரேஷன் கடை பணியாளர்களுக்கு 25% கூடுதல் ஊதிய உயர்வு கிடையாது என ஊழியர்களின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த கூட்டுறவுத்துறை. (மேலும் படிக்க)
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 09) எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 தரப்பினரிடையே போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் நிலவும் அரசியல் கள நிலவரம் மற்றும் முன்னிலை விவரங்களை இங்கு உடனுக்குடன் பார்க்கலாம்.
ரேஷன் கடை பணியாளர்களுக்கு 25% கூடுதல் ஊதிய உயர்வு கிடையாது என ஊழியர்களின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த கூட்டுறவுத்துறை. (மேலும் படிக்க)
Tamil Nadu Government : திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் ரூ.2 லட்சம் வரை அதிரடி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)
Tamil Nadu Government Scholarship : 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1000 உதவித்தொகை கொடுக்கப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
"...அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி" என இடைத்தேர்தல் வெற்றியை தடுத்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக 3வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி, துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என்றும்; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
சத்யபாமா (தவெக): 66,841
சுகன்யா (திமுக): 57,690
பானுமதி (அதிமுக): 45,280
New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு பெயர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். (முழு விவரம் இங்கே)
புறம்போக்கு நில வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) இன்றி மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுளது. (மேலும் படிக்க)
Tamil Nadu Government : விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க தமிழக அரசு வழங்கும் 70% வரை மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
தாராபுரத்தில் 20 சுற்றுகளும், மதுராந்தகத்தில் 16 சுற்றுகள் முடிவடைந்தது. இன்னும் குறைவான சுற்றுகளே உள்ள நிலையில் தவெக வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது.
தவெக - 51,253
திமுக - 42,390
அதிமுக 32,892
தவெக - 41,440
திமுக - 28,031
அதிமுக - 24,039
மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளில் அதிமுக பின்னடைவை சந்தித்ததற்கு பாமக ஒரு காரணம் என கூறப்படுகிறது. (மேலும் படிக்க)
மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடக்கம் முதலே வலுவான முன்னிலை பெற்று வரும் நிலையில், விசிக மற்றும் பாமக ஆதரவு வாக்குகள் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. (மேலும் படிக்க)
மதுராந்தகம் தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சியின் வேட்பாளர் மரகதம் குவரவேல் 30,841 வாக்குகள் பெற்று 10,339 வாக்கு வித்தியாசத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
திமுக - 20,502
அதிமுக - 17,687
நாதக - 925
தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சி வேட்பாளர் சத்தியபாமா 27,649 வாக்குகள் பெற்று 4128 வாக்கு வித்தியாசத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
அதிமுக - 23,521
திமுக - 22,503
நாதக - 2,156
மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவர் தற்போது வரை 27,184 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து திமுக வேட்பாளர் பரந்தாமன் 18, 379 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். அவர் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்... (மேலும் படிக்க)