• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Video: இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்... டெல்லியில் பரபரப்பு - நடந்தது என்ன?

Video: இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்... டெல்லியில் பரபரப்பு - நடந்தது என்ன?

டெல்லி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பொதுவெளியில் இளைஞரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் அளித்த விளக்கத்தை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 27, 2026, 08:35 PM IST|Updated: Sep 27, 2026, 08:49 PM IST
joinshare
Video: இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்... டெல்லியில் பரபரப்பு - நடந்தது என்ன?
Image Credit: Delhi Minister Slaps Youth Viral Video | Screen Grab : X/@JarnailSinghAAP

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லியில் திலக் நகரில் உள்ள சாலைகளை ஆய்வு செய்துபோது, அங்கு ஏற்பட்ட சலசலப்பில் இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்த நிகழ்வு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆய்வு செய்து வந்தபோது, அங்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜார்னைல் சிங் அவருடன் சாலையின் தரத்தை குறிப்பிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

வீடியோவில் தெரிந்தது என்ன?

அப்போது முகத்திற்கு நேராக வீடியோ எடுத்த அந்த இளைஞரின் மொபைலை இடது கையால் தட்டிவிட்ட அமைச்சர், அவரது வலது கையால் இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். உடனே அவர்களுக்கு நடுவே புகுந்த பாதுகாப்பு அதிகாரி இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அமைச்சரை பாதுகாப்பாக காரில் ஏற்றினார்.

மேலும் படிக்க | SIR to Form 6: அனைத்து சர்ச்சைகளுக்கும்... தேர்தல் ஆணையர்கள் கூட்டாக விளக்கம்!

சம்பவத்தின் போது அமைச்சர் பர்வேஷ் வர்மாவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராக சுற்றியிருந்த பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இளைஞரை தாக்கிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

यह भारत की राजधानी दिल्ली की भाजपा सरकार के pwd मिनिस्टर हैं 
सड़क का निरीक्षण करने आए थे पर घोटाले ही घोटाले उजागर होते देखकर आपा खो बैठे और वीडियो रिकॉर्ड करने वाले मेरे साथी को के साथ गुंडागर्दी कर बैठे..@ArvindKejriwal @narendramodi @AamAadmiParty @gupta_rekha @p_sahibsingh… pic.twitter.com/VR5iVQLtQH

— Jarnail Singh (@JarnailSinghAAP) September 27, 2026

பர்வேஷ் வர்மா இன்று மதியம் 1.30 மணியளவில் திலக் நகரில் புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

இளைஞரை தாக்கிய பிறகும் அந்த வீடியோ நீண்டது. அந்த வீடியோவில்:

ஒருவர்: "ஏய்... அவரை நீ எப்படி அடிக்கலாம்...?"

மற்றொருவர்: "நீங்கள் அவனை அறைந்துவிட்டாய் சகோதரா, அவன் அவனை அறைந்துவிட்டான் பார். அவன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது அவனை அறைந்துவிட்டான்"

இன்னொருவர்: "சாதாரண மனிதர் எவரையும் இப்படி அறைந்துவிட முடியாது"  என குரல்கள் பதிவாகியிருந்தன.

*வீடியோவில் உள்ள இந்த குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட முறையில் உறுதிசெய்யப்படவில்லை.

அமைச்சரால் தாக்கப்பட்டவர் யார்...?

அமைச்சர் பர்வேஸ் வர்மா தாக்கிய நபரின் பெயர் சாகிப் சிங் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த திலக் நகர் எம்எல்ஏ ஜார்னைல் சிங்கிடம் அவர் உதவியாளராக பணியாற்றி வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜார்னைல் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | மிகப்பெரிய வங்கி கொள்ளை... ரூ.33.62 கோடியில் தங்கம், பணம் அபேஸ் - ஜார்க்கண்டில் நடந்தது என்ன?

ஜார்னைல் சிங் X பதிவு

சம்பவ இடத்தில் ஜார்னைல் சிங், அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அவரது X பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள பாஜக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆவார். அவர் சாலையை ஆய்வு செய்ய வந்திருந்தார். ஆனால் வரிசையாக ஊழல்கள் அம்பலமாவதைக் கண்டு நிதானமிழந்து, வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்த எனது சக ஊழியரிடம் ஒரு ரவுடியை போல நடந்துகொண்டார்" என சாடியிருந்தார். அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி விகாஸ்புரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

सड़क निर्माण में भ्रष्टाचार दिखाने पर मोदी जी के मंत्री ने एक युवक को सरे आम थप्पड़ मारा।

मैं कल तिलक नगर जाकर इस सड़क का मुआयना करूंगा। pic.twitter.com/MnKbQ5L0CP

— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 27, 2026

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரை கைது செய்யும்படி கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் பர்வேஸ் வர்மா விளக்கம்

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமைச்சர் பர்வேஸ் வர்மா விளக்கம் அளித்து அதை வீடியோவில் பதிவு செய்து X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில்,"ஒருவர் உங்கள் குடும்பத்தை இழிவாகப் பேசும்போது எவரும் நான் நடந்துகொண்டதை போலவேதான் நடந்துகொள்வார்கள்" என தெரிவித்துள்ளார். அதாவது, அந்த இளைஞர் அமைச்சரின் குடும்பத்தை இழிவாகப் பேசியதாக அவர் தெரிவித்தார்.

ஒப்பந்ததாரர்களை அறிமுகப்படுத்தவும், கமிஷன் ஏற்பாடு செய்யவும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது ஜார்னைல் சிங் அழுத்தம் கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டினார். "நான் அங்கு நின்று ஆய்வு பணிகளை பார்த்தபோது, ​​பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. 15 ஆண்டுகளாக அந்தச் சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இப்போதுதான் அது கட்டப்படுவதாகவும் அங்கிருந்த மக்கள் என்னிடம் கூறினர்.

आज की घटना के पीछे की पूरी सच्चाई सुनिए…लेकिन जो हुआ वो नहीं होना चाहिए था । pic.twitter.com/qWnMkPQtnJ

— Parvesh Sahib Singh (@p_sahibsingh) September 27, 2026

எம்எல்ஏ ஜார்னைல் சிங்கை மூன்று முறை அழைத்தேன். அவருக்காக 45 நிமிடங்கள் காத்திருந்தேன். அங்கு இருந்த எங்கள் ஊழியர்களை நான் அழைக்கவில்லை. ஜர்னைல் சிங் வந்தபோது ​​அவர் தனது ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் அங்கு வந்தார்.

அவர் வந்த உடனேயே அநாகரிகமாக நடந்துகொள்ளத் தொடங்கினர். அவரது ஊழியர் ஒருவர் என் குடும்பத்தினரைத் தரக்குறைவாகப் பேசியபோது, ​​எந்தவொரு நபரும் கோபமடைவது இயல்பு; நானும் அப்படித்தான் நடந்துகொண்டேன்.

ஆம் ஆத்மி கட்சியினரிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: உங்களால் செய்ய முடியாத பணிகளை இப்போது எங்கள் அரசு செய்து வருகிறது, அதனால்தான் நீங்கள் அதிருப்தி அடைந்துள்ளீர்கள். அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதையோ, அரசுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதையோ அல்லது அரசு அதிகாரிகளிடம் கமிஷன் கேட்பதையோ அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது" என்றார்.

மேலும் படிக்க | நாட்டின் முதல் LNG ரயில்... தொடங்கிவைத்த அமித்ஷா - இதில் என்ன ஸ்பெஷல்?

Add Zee News as a Preferred Source
TAGS:
India