இந்தியா-ASEAN உறவினை மேம்படுத்த, சுற்றுலா, தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி, இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பிரதமர் மோடி புதிய திட்டங்களை சமீபத்தில் முன்மொழிந்துள்ளார்.
கடந்த 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 23வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நடந்தது. மனிலாவில் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு முன்னெடுப்புகளானது அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, ஆசியான் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச மின்ன்ணு இசா வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தனை, பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வரூகிறது. 1967ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ்,, மலேசியா, மியான்மர், பிலிபைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர் லெஸ்தே, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட 11 நாடுகள் இருக்கின்றன.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆசியான் நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நீண்டகால கடல்சார் திட்டம் தொடங்கப்படும் எனவும் ஆசியான் நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு நாளந்தா பல்கலைக்கழகத்தில் உதவித்தொகி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆசியான் நாடுகளுக்கு இடையே, நீண்டகால கடல்சார் ஒத்துழைப்பு திட்டத்தை உருவாக்கவும் பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். இதில், கடல்வழி போக்குவரத்து இணைப்பு, அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோர காவல்படை ஒத்துழைப்பு, கடல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கடற்பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, பிராந்திய நாடுகளின் திறனை மேம்படுத்தும் வகையில், கூட்ட இணைய தடயவிய்ல் பயிற்சி திட்டத்தை செயல்படுத்தவும் பிரதமர் மோடி பரிந்துரைத்திருக்கிறார். மேலும், அணுசக்தி துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆசியான் - இந்தியா விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் சுரங்க தொழில், முக்கிய கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முன்மொழியப்பட்டிருக்கிறது.