SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஐபிஎல் ஏலத்திற்கு முன் இளம் வீரர்களுக்கு மெகா வாய்ப்பு - இன்று தொடங்கும் SMAT தொடர்... முழு விவரம்

இன்று (நவம்பர் 14) தொடங்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பை 2026-27 டி20 தொடரின் வரலாறு, போட்டி வடிவம், தமிழ்நாடு அணி ஸ்குவாட், கவனிக்க வேண்டிய Uncapped வீரர்கள், நட்சத்திர வீரர்கள், நேரலை விவரங்களை இங்கே முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

Written By Sudharsan G
Published: Nov 14, 2026, 12:54 AM IST | Updated: Nov 14, 2026, 01:58 AM IST
Image Credit: AI Generated Image : ChatGPT
Join

Syed Mushtaq Ali Trophy 2026-27, Explained: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்படும் சையத் முஷ்டாக் அலி கோப்பை, நாட்டின் முக்கியமான உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடராகும்.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடருக்குள் நுழைய உள்நாட்டு வீரர்களுக்கு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்தான் முதல்படியாகும். SMAT தொடரில், அனுபவ வீரர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் அணிகளின் கண்களில் தென்படுவார்கள் என்பதால் இத்தொடர் இளம் வீரர்களுக்கு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், 2026 சீசனில் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் குறித்த முழு விவரத்தையும் இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | IPL Trading Rules: வீரர்களின் சம்மதம் இல்லாமல் டிரேடிங் செய்ய முடியுமா? பிசிசிஐ விதிமுறைகள் என்ன? Explained

SMAT தொடரின் வரலாறு

கோப்பையை வென்ற அணிகள்

SMAT 2026-27 : மொத்தம் எத்தனை அணிகள்?

SMAT 2026-27 : பார்மட்

மேலும் படிக்க | SMAT தொடரில் விளையாடும் 14 CSK வீரர்கள்... எந்தெந்த அணியில் யார் யார்...? இதோ

SMAT 2026-27 : எலைட் மற்றும் பிளேட் குரூப் அணிகள் விவரம்

ஏ பிரிவுபி பிரிவுசி பிரிவுடி பிரிவுபிளேட் அணிகள்
பரோடாபிகார்ஆந்திர பிரதேசம்சத்தீஸ்கர்அருணாச்சல் பிரதேசம்
பெங்கால்டெல்லிஅசாம்கோவாமணிப்பூர்
சண்டிகர்ஹரியானாஹிமாச்சல் பிரதேசம்குஜராத்மேகாலயா
ஜார்க்கண்ட்ஜம்மு காஷ்மீர்கேரளாஹைதராபாத்நாகாலாந்து
கர்நாடகாபஞ்சாப்மத்திய பிரதேசம்மும்பைசர்வீசஸ்
மிசோரம்ரயில்வேஸ்மகாராஷ்டிராஒடிசாசிக்கிம்
ராஜஸ்தான்தமிழ்நாடுபாண்டிச்சேரிஉத்தரகாண்ட் 
உத்தர பிரதேசம்சௌராஷ்டிராதிரிபுராவிதர்பா 

SMAT 2026-27 : எந்தெந்த நகரங்களில் போட்டி நடக்கும்?

எலைட் குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் மும்பை, இந்தூர், மொஹாலி, நியூ சண்டிகர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். நாகாலாந்தின் சோவிமா நகரில் பிளேட் குரூப் போட்டிகள் நடைபெறும்.

SMAT 2026-27 : கவனிக்க வேண்டிய Uncapped வீரர்கள்

  1. துஷார் ரஹேஜா (தமிழ்நாடு)
  2. சலில் அரோரா (பஞ்சாப்)
  3. அஸ்வின் ஹெப்பர் (ஆந்திரா)
  4. சத்யநாராயண ராஜூ (ஆந்திரா)
  5. ஷேக் ரஷீத் (ஆந்திரா)
  6. அபிஷேக் பொரேல் (பெங்கால்)
  7. அன்கித் குமார் (ஹரியானா)
  8. பிரசாந்த் வீர் (உத்தர பிரதேசம்)
  9. கார்த்திக் சர்மா (ராஜஸ்தான்)
  10. அசோக் சர்மா (ராஜஸ்தான்)
  11. அர்ஷின் குல்கர்னி (மகாராஷ்டிரா)
  12. அனுகுல் ராய் (ஜார்க்கண்ட்)
  13. விக்னேஷ் புதூர் (கேரளா)
  14. ராஜ் லிம்பானி (பரோடா)
  15. ரஷிக் சலாம் (பரோடா)
  16. ஷிவாலிக் சர்மா (பரோடா)
  17. பிரியான்ஷ் ஆர்யா (டெல்லி)
  18. தேஜஸ்வி தஹியா (டெல்லி)
  19. ஆயுஷ் தோசேஜா (டெல்லி)
  20. உர்வில் பட்டேல் (குஜராத்)
  21. அஷுதோஷ் சர்மா (குஜராத்)
  22. நிஷாந்த் சிந்து (ஹரியானா)
  23. நெஹல் வதேரா (ஹிமாச்சல் பிரதேசம்)
  24. அப்துல் சமத் (ஜம்மு காஷ்மீர்)
  25. பிரிஜேஷ் சர்மா (ஜம்மு காஷ்மீர்)
  26. ரவிசந்திரன் ஸ்மரன் (கர்நாடகா)
  27. மன்வந்த் குமார் (கர்நாடகா)
  28. வித்வத் கவேரப்பா (கர்நாடகா)
  29. விஷ்ணு வினோத் (கேரளா)
  30. சல்மான் நிசார் (கேரளா)
  31. அனிகேத் வர்மா (மத்திய பிரதேசம்)
  32. மங்கேஷ் யாதவ் (மத்திய பிரதேசம்)
  33. சிவாங் குமார் (மத்திய பிரதேசம்)
  34. சாஹில் பராஹ் (மகாராஷ்டிரா)
  35. ராமகிருஷ்ண கோஷ் (மகாராஷ்டிரா)
  36. டேனிஷ் மலேவர் (விதர்பா)
  37. நிசிகேட் பூட்டே (விதர்பா)
  38. பிரபுல் ஹிங்கே (விதர்பா)
  39. தர்ஷன் நல்கண்டே (விதர்பா)
  40. சுவஸ்திக் சிக்காரா (உத்தர பிரதேசம்)
  41. ஆர்யன் ஜூயல் (உத்தர பிரதேசம்)
  42. சமிர் ரிஸ்வி (உத்தர பிரதேசம்)
  43. கார்த்திக் தியாகி (உத்தர பிரதேசம்)
  44. மோஷின் கான் (உத்தர பிரதேசம்)
  45. நாராயண் ஜெகதீசன் (தமிழ்நாடு)
  46. ஆன்ட்ரே சித்தார்த் (தமிழ்நாடு)
  47. ஷாருக்கான் (தமிழ்நாடு)
  48. பி சச்சின் (தமிழ்நாடு)
  49. மணிமாறன் சித்தார்த் (தமிழ்நாடு)
  50. குர்ஜப்னீத் சிங் (தமிழ்நாடு)
  51. ருசித் அஹிர் (சௌராஷ்டிரா)
  52. முகுல் சௌத்ரி (ராஜஸ்தான்)
  53. மஹிபால் லோம்ரோர் (ராஜஸ்தான்)
  54. அன்மோல் பிரீத் சிங் (பஞ்சாப்)
  55. பிரப்சிம்ரன் சிங் (பஞ்சாப்)
  56. உதய் சஹாரன் (பஞ்சாப்)
  57. விஹான் மல்ஹோத்ரா (பஞ்சாப்)
  58. கார்த்திக் சதா (பஞ்சாப்)
  59. ஷஷாங்க் சிங் (புதுச்சேரி)
  60. அமான் கான் (புதுச்சேரி)
  61. சின்மே சுதார் (மிசோரம்)
  62. அங்கிரிஷ் ரகுவன்ஷி (மும்பை)
  63. அதர்வா அன்கோலேகர் (மும்பை)
  64. முஷீர் கான் (மும்பை)

SMAT 2026-27 : விளையாடும் நட்சத்திர வீரர்கள்

  1. வைபவ் சூர்யவன்ஷி (பிகார் - கேப்டன்)
  2. சூர்யகுமார் யாதவ் (மும்பை - கேப்டன்)
  3. சஞ்சு சாம்சன் (கேரளா - கேப்டன்)
  4. ருதுராஜ் கெய்க்வாட் (மகாராஷ்டிரா)
  5. சிவம் தூபே (மும்பை)
  6. ஷர்துல் தாக்கூர் (மும்பை)
  7. சர்பராஸ் கான் (மும்பை)
  8. முகேஷ் சர்மா (பெங்கால்)
  9. முகமது ஷமி (பெங்கால்)
  10. ஆவேஷ் கான் (ம.பி)
  11. ரஜத் பட்டிதார் (ம.பி)
  12. புவனேஷ்வர் குமார் (உ.பி)
  13. தீபக் சஹார் (ராஜஸ்தான்)
  14. ராகுல் சஹார் (ராஜஸ்தான்)
  15. குர்னால் பாண்டியா (பரோடா)
  16. ஜித்தேஷ் சர்மா (பரோடா)
  17. பிருத்வி ஷா (மகாராஷ்டிரா)
  18. மணிஷ் பாண்டே (கர்நாடகா)
  19. கருண் நாயர் (கர்நாடகா)
  20. உம்ரான் மாலிக் (ஜம்மு காஷ்மீர்)
  21. வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு)
  22. ஹர்ஷித் ராணா (டெல்லி)
  23. மயங்க் யாதவ் (டெல்லி)

SMAT 2026-27 : தமிழ்நாடு அணி ஸ்குவாட்

துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், நாராயண் ஜெகதீசன், பி. சச்சின், ஆண்ட்ரே சித்தார்த், ரித்திக் ஈஸ்வரன், ஷாருக் கான், சாய் கிஷோர் (கேப்டன்), சன்னி சந்து, ஆர். ராஜ்குமார், குர்ஜப்னீத் சிங், ஜி. கிஷூர், எம். சித்தார்த், வருண் சக்கரவர்த்தி, அதிசயராஜ் டேவிட்சன், சிலம்பரசன்

*நடராஜன் முதற்கட்ட ஸ்குவாடில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதில் சிலம்பரசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

SMAT 2026-27 : நேரலையில் பார்ப்பது எப்படி?

போட்டி நடைபெறும் தினத்தன்று, எலைட் குரூப் போட்டிகள் காலை 9, காலை 11, மதியம் 1.30, மாலை 4.30 என நடைபெறும்.

தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க்

ஓடிடி: ஜியோ நெட்வோர்க்

ஐபிஎல் அணிகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி தங்களின் வீரர்களை தக்கவைக்க கடைசி நாளாகும். முதல் சுற்று போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதியும், 2வது சுற்று போட்டிகள் நவம்பர் 16ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. எனவே, இளம் வீரர்களுக்கு முதலிரண்டு சுற்று போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

அதேநேரத்தில், டிசம்பர் 16ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறும் என்பதால் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என எண்ணுவார்கள். எனவே இந்த தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றியதே இவர்தான்.. மும்பை இந்தியன்ஸில் நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES