SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுராந்தகம், தாராபுரம்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு - 5 முனைப் போட்டி

Maduranthakkam, Dharapuram : மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தி மற்றும் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக லட்சுமணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Written By Sudharsan G
Published: Sep 15, 2026, 18:30 IST | Updated: Sep 15, 2026, 18:57 IST
Image Credit: Maduranthakkam, Dharapuram By-Election CPI CPIM Candidates | Image Source : X
Join

Maduranthakkam, Dharapuram By-Election : மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, இந்த இரண்டு தொகுதிகளிலும் பொதுத்தேர்தலில் வென்ற அதிமுக, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதையொட்டி, தவெக ஆட்சியமைவதற்கு ஆதரவளித்த சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டன. மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம், தாராபுரம் தொகுதியில் சிபிஐ போட்டியிட முடிவெடுத்தன. இதனால், இரு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

மேலும் படிக்க | Explained: தமிழக இடைத்தேர்தல் களம்: தாராபுரம் vs மதுராந்தகம்.. திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யார் இந்த சுகந்தி...?

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில், "ஏறத்தாழ ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருப்பவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆவார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியினுடைய மாநில பொதுச்செயலாளராக தற்போது செயல்பட்டு வருபவர்.

ஏற்கெனவே அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினுடைய மாநில பொதுச் செயலாளராக பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, தமிழ்நாடு முழுவதும் பெண்களுடயை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், பெண்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்த போராட்டத்திலும் பல களங்களை கண்டவர் தோழர் சுகந்தி என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகளுடைய ஆதரவோடு அவர் இந்த தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்" என்றார்.

தவெக வேட்பாளர்கள் யார் யார்...?

அதிமுக சார்பில் 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, அவர்கள் தவெகவில் இணைந்தனர். தற்போது இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதே நபர்கள் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தவெகவை விமர்சிக்கும் கம்யூனிஸ்ட்கள்

அதிமுகவில் இருந்து வந்த நபர்களையே தவெக வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. தொடர்ந்து திண்டுக்கலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட விவகாரம் முதல் தவெக அரசுடன் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் விமர்சனப் போக்கையே மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க | மதுராந்தகம், தாராபுரம் இடைதேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் தெரியுமா?

சமீபத்தில் பட்டினப்பாக்கத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கும் சிபிஎம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இடைத்தேர்தலில் சிபிஎம் மற்றும் சிபிஐ இணைந்து போட்டியிட முடிவெடுத்திருக்கின்றன. எனவே, சிபிஎம் மதுராந்தகம் தொகுதியையும், சிபிஐ தாராபுரம் தொகுதியையும் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

பிற கட்சிகளின் வேட்பாளர்கள்

திமுக தரப்பில் ஐ.பரந்தாமன் மதுராந்தகம் தொகுதியிலும், வழக்கறிஞர் சுகன்யா தாராபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் கணிதா சம்பத் மதுராந்தகம் தொகுதியிலும், கே. பானுமதி தாராபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஜானகி ராமன், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். மனுவை திரும்பப் பெற செப். 19ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி இருத் தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

காலியாக உள்ள 5 தொகுதிகள்

தாராபுரம், மதுராந்தகம் ஒருபுறம் இருக்க திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளும் காலியாகவே உள்ளன. இருப்பினும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவற்றுக்கு இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES