• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கும் மேல்... மின் பிரச்னை தீர்க்க தமிழக அரசின் புதிய பிளான்!

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கும் மேல்... மின் பிரச்னை தீர்க்க தமிழக அரசின் புதிய பிளான்!

Minister CTR Nirmal Kumar: காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததே மின்சார தட்டுப்பாட்டிற்கு காரணம் என்றும்; தற்போது மின்சாரத் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மின் பிரச்னையை தீர்ப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அவர் விவரித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Sep 15, 2026, 07:49 PM IST|Updated: Sep 15, 2026, 07:57 PM IST
joinshare
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கும் மேல்... மின் பிரச்னை தீர்க்க தமிழக அரசின் புதிய பிளான்!
Image Credit: Minister CTR Nirmal Kumar | File Image

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Power Cut Issue, Minister CTR Nirmal Kumar: சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டியில், "கடந்த ஒரு வாரத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் செப்டம்பர் மாதத்தில் காற்று வீசும் அளவு குறைகிறது. இதனால், காற்றாலை மின் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும்.

மேலும், கடந்தாண்டு இதேநேரத்தில் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஆனால் தற்போது 19 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. சுமார் 3000 மெகாவாட் அதிகமாக தேவைப்படுகிறது. இதனால், கடந்த வாரம் 2000 மெகாவாட் வெளியில் இருந்து கொள்முதல் செய்தோம்.

மேலும் படிக்க | பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் தொடர் மின்வெட்டு ஏன்...?

கூடுதல் மின்சாரம் வாங்க...

இன்றும் பார்த்தீர்கள் என்றால் மின்சாரம் மேலும் 1,500 மெகாவாட் குறைந்திருக்கிறது. குறைந்ததால் இன்று சந்தையில் இருந்து கூடுதலாக 1,500 மெகாவாட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு குறைந்த 1,500 மெகாவாட்டையும் சீர் செய்வதற்காக வெளியில் இருந்து, அதாவது பொதுத்தொகுப்பில் இருந்து 1,500 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கிறோம், மீட்டிங் முடிந்திருக்கிறது.

மின்தட்டுப்பாடு ஏதுமில்லை...

மின் தட்டுப்பாடு இல்லாமல் சீர்செய்யும் பணிகளை செய்து முடிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் கடந்த மூன்று நாட்களாக முழுவதும் சீரமைக்கப்பட்டிருக்கிறது. மின்சார தட்டுப்பாடு இல்லை. எதுவும் பிரச்னை இல்லை. ஒரு சில இடத்தில் ஏதாவது பவர் ஃபெயிலர்ஸ் ஏற்படும்.

இந்த இயல்பான பிரச்னைகளால் வரும் பவர் ஃபெயிலியர்ஸ் தவிர்த்து மின்சார தட்டுப்பாடு என்பது காரணமில்லை. பெரிய அவுட்டேஜ்ஸ் ஏதுமில்லை. ஏதாவது சிறு சிறு பிரச்னைகளால் வரும் மின்தடை மட்டுமே இருக்கிறது. மற்றபடி எதுவும் இல்லை. எல்லாமே சீர் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் சீராக சென்றுகொண்டிருக்கிறது.

லாங் டேர்ம் அக்ரிமெண்ட்

முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுபடி முழுவதையும் சீரமைத்து அனைத்து பக்கமும் சீர்செய்து கொண்டிருக்கிறோம். நமது துணை மின் நிலையஙக்களில் என்னென்ன தொடங்க வேண்டுமோ, அதன் பணிகளெல்லாம் நடைபெற்று வருகிறது. வரும்காலத்தில் லாங் டேர்ம் அக்ரிமெண்ட் போடுவதற்கான வேலைகளை முழுமையாக தொடங்கி இருக்கிறோம். அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும்" என்றார்.

மற்ற மாநிலங்கள் போல் இல்லாமல்...

தொடர்ந்து, 2 மணிநேரம், 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டுள்ளதே...? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அந்த தட்டுப்பாடு கடந்த ஒரு வாரமாக நிலவியது, அது எல்லாம் வந்து சீர் செய்யப்பட்டது. ஒரு சில இடத்துல ஏதாவது ட்ரான்ஸ்பார்மர் ஃபெயிலியர்ஸ் போன்ற பிரச்னைகள் இருந்திருக்கும். மற்ற அனைத்து இடங்களிலும் மின்சார தட்டுப்பாடு காரணமாக போன வாரம் இரண்டு நாட்கள் இருந்தது. அந்த தட்டுப்பாடு சீர் செய்யப்பட்டது.

நீங்கள் மற்ற மாநிலங்களில் பார்த்திருப்பீர்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் லோட் ஷெட்டிங் பண்றாங்க. அவர்கள் பொதுத்தொகுப்பில் இருந்து மின்சாரத்தை வாங்கவில்லை. ஏனென்றால் இன்று விலை அதிகமாக இருக்கிறது, 20 ரூபாய்க்கு மேல இருக்கிறது. அதனால யாரும் வந்து மின்சாரத்தை வாங்கவில்லை.

மேலும் படிக்க | தொடர் பவர்கட்... காரணம் என்ன...? இனி நோ பிரச்னை - தமிழ்நாடு அரசு விளக்கம்

நாம் அதையும் தாண்டி, இன்று பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுத்தொகுப்பில் இருந்து வாங்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். கேரளாவில் பார்த்திருப்பீர்கள். கேரளாவிலேயே அவர்களின் முதலமைச்சர் குறித்து வீடியோவெல்லாம் போட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அங்கெல்லாம் லோட் ஷெட்டிங் பண்ணி, அவர்கள் பர்ச்சேஸை குறைத்திருக்கிறார்கள்.

ஆனால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து நாம் வாங்கியிருக்கிறோம்.  மாநிலங்களிடம் இருந்து மார்க்கெட் ரேட்டில் என்ன இருக்கிறதோ, அந்த ரேட்டுக்குதான் வாங்கியிருக்கோம். வேற வழியில்லாமல் நாம் மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்றார்.

லாங் டேர்ம் அக்ரிமெண்ட் பிரச்னையா...?

தொடர்ந்து லாங் டேர்ம் அக்ரிமெண்ட் போடும்போது நமக்கே சர்ப்ளஸா கிடைக்கும்போது அந்த ஒப்பந்தத்துக்குள் சிக்கி இருப்போம். அப்ப நமக்கு இழப்புதான் அதிகமாகும் என்று ஒரு விமர்சனம் வைக்கிறார்களே... என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், "இல்லை, லாங் டேர்ம் அக்ரிமெண்ட் போடுறதுதான் நமக்கு எப்போதும் உகந்தது. ஏனென்றால், அதில்தான் நமக்கு லாங் டேர்ம்க்கு, அதாவது 24x7 நமக்கு ஒரே விலையில் மின்சாரம் கிடைக்கும். ஷார்ட் டேர்ம் அக்ரிமெண்ட் மார்க்கெட் பர்ச்சேஸ் எப்போதுமே நமக்கு செலவு அதிகமாகும்.

அதை முற்றிலும் தவிர்ப்பதுதான் நமது கொள்கையாகும். அதற்கான முயற்சிகள்தான் செய்துகொண்டு இருக்கிறோம். ஷார்ட் டேர்ம் அக்ரிமெண்ட், மார்க்கெட் பர்ச்சேஸை நம்ம முழுமையாக நிறுத்திவிட்டு, லாங் டேர்ம் அக்ரிமெண்ட் போவதுதான் நமது கொள்கையாக இருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20+

மேலும், இப்போதைக்கு மின்சாரத்தை சராசரியாக ஒரு யூனிட் ரூ. 20 அளவுக்கு வாங்குவதாக தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் எப்போதும் 20 ரூபாய்க்கு மேலதான் இருக்கும் என்றும்; இந்தளவுக்கு அதிக விலை கொடுத்துதான் அனைத்து மாநிலங்களும் மின்சாரத்தை வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | மின்வெட்டுக்கு இதுதான் காரணம்... அன்புமணி சுட்டிக்காட்டிய முக்கிய மேட்டர்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu