SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பெண்களுக்கு பணியிடத்தில் மாதவிடாய் விடுப்பு: குழு அமைத்து பரிசீலிக்கும் தமிழக அரசு

TN Government: அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய, 13 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக மாநில அரசு புதன்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்விடம் தெரிவித்தது.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 24, 2026, 11:04 IST | Updated: Sep 24, 2026, 11:16 IST
Image Credit: Representative / Paid Menstrual Leave for Women
Join

மதுரை: தமிழக அரசு இன்னும் சில நாட்களில் பெண்களுக்கு ஒரு சிறப்பு பரிசை அளிக்கக்கூடும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய, 13 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக மாநில அரசு புதன்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்விடம் தெரிவித்தது.

குழு அமைப்பதற்கான அரசாணை

நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்விடம், தொழிலாளர் நலத்துறை மூலம் இக்குழுவை அமைப்பதற்கான அரசாணை செப்டம்பர் 18, 2026 அன்று வெளியிடப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த அரசு ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநரான எம். நர்மதா தாக்கல் செய்த பொதுநல வழக்கு மீதான விசாரணையின்போது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டதாவது:

‘‘தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கு மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்ககுமாறும் உத்தரவிட வேண்டும்.’’

மேலும் படிக்க | Tamil News LIVE: சபரிமலை ஜயப்பனின் தங்க கீரிடம் திருட்டு.. ஆசிய விளையாட்டு! இன்றைய முக்கிய செய்திகள்

ஜனவரி 21, 2027-க்குள் அறிக்கை

இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க மூன்று மாத கால அவகாசம் வழங்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அடுத்த விசாரணையான ஜனவரி 21, 2027-க்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாதவிடாய் கால விடுப்புக் கொள்கை

அலுவலக பணிகளில் இருக்கும் பல பெண்கள் கடுமையான மாதவிடாய் வலிக்காக தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக தெரிவித்த நர்மதா, அப்படி வரும் பெண்கள் மிகுந்த வலியுடன் இருந்தாலும் தங்கள் ஆண் சகாக்களுக்கு இணையாகப் பணியாற்ற வேலைக்கு செல்வதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாதவிடாய் கால விடுப்புக் கொள்கை நடைமுறையில் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் அத்தகைய கொள்கை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. முகக்கவசம் அணிவது கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி

மனிதாபிமான மற்றும் பாலின உணர்திறன் கொண்ட பணிச்சூழலை வழங்கத் தவறுவது அரசியலமைப்பின் 42-வது பிரிவை மீறும் செயலாகும் என்று கூறிய நர்மதா, குறிப்பாகப் பெண்களுக்கு நியாயமான மற்றும் மனிதாபிமான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்தினார்.

மேலும், தற்போதுள்ள தற்செயல் விடுப்பு (casual leave) மற்றும் மருத்துவ விடுப்பு (sick leave) போன்ற நடைமுறைகள், குறிப்பாக வலிமிகுந்த மாதவிடாய் (dysmenorrhea) பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

கொள்கையை உருவாக்க கோரிக்கை

நீதிமன்றம் மூலமாகச் சட்டம் இயற்றுவதையோ அல்லது அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இதை அமல்படுத்துவதையோ தான் கோரவில்லை என்றும், மாறாக அக்டோபர் 20, 2025 தேதியிட்ட தனது கோரிக்கையைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, தகுந்த வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கையை உருவாக்குமாறு அரசுக்கு உத்தரவிட மட்டுமே கோருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் 2015 போன்ற மழையா? எல் நினோ தரும் சமிக்ஞை என்ன? - Explainer

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES