SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil Nadu Live : திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி; வி.எஸ். பாபு இறுதி ஊர்வலம்; வானிலை நிலவரம்

Tamil Nadu Live News : சபரிமலை நடைத்திறப்பு, இபிஎப்ஓ இருப்புத்தொகை குறைக்க ஒப்புதல், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 20, 2026, 10:42 IST | Updated: Nov 20, 2026, 18:43 IST
Image Credit: Tamil Nadu Live News
Join

Tamil Nadu Live News : சபரிமலை நடைத்திறப்பு, இபிஎப்ஓ இருப்புத்தொகை குறைக்க மத்திய தொழிலாளர் நலவாரியம் ஒப்புதல், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் நீக்கம் தொடர்பாக விளக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் 
 

20 Nov 2026 17:25 IST

Puducherry Karaikal News: புதுச்சேரி, காரைக்கால் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி காந்திநகர் மற்றும் காரைக்கால் விநாயக மிஷன் மருத்துவமனையில் வரும் நவம்பர் 27-ம் தேதி ESI மற்றும் EPF குறைதீர்வுக் கூட்டம் நடைபெறுகிறது. நேரம் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த முழு விவரம் அறிய... (மேலும் படிக்க)

20 Nov 2026 17:13 IST

EPS Pension Hike: EPFO CBT கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஏமாற்றம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹1,000-லிருந்து ₹3,000-ஆக உயர்த்தக்கூடும் என்று ஊகங்கள் நிலவின. இதனால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியம் உயரும் என்று எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வந்ததா?.. (மேலும் படிக்க)
 

20 Nov 2026 17:04 IST

VS Babu Funeral: வி.எஸ். பாபு இறுதிச் சடங்குகள் தொடக்கம்

சென்னை திரு.வி.க நகர் மின் மயானத்தில் மறைந்த தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் இறுதிச் சடங்குகள் தொடக்கம். 

20 Nov 2026 16:40 IST

VS Babu Funeral: வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலம் தொடங்கியது

மறைந்த தவெக எம்எல் ஏ வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடலை முதலமைச்சர் விஜய் தோளில் சுமந்து சென்றார். வி.எஸ். பாபு உடல் திரு.வி.க நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. (மேலும் படிக்க)

20 Nov 2026 16:21 IST

Puducherry DR Hike: 3% அதிகரித்த அகவிலை நிவாரணம்

புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 60 சதவிகிதத்திலிருந்து 63 சதவிகிதமாக அதிகரிக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ளது... (மேலும் படிக்க)

20 Nov 2026 15:59 IST

Southern Railway News: கார்த்திகை தீபம் சிறப்பு ரயில்கள்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - வேலூர், வேலூர் - விழுப்புரம், திருவண்ணாமலை  - விழுப்புரம், தாம்பரம்  - திருவண்ணாமலை, கடற்கரை - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. (மேலும் படிக்க)

20 Nov 2026 15:53 IST

Puducherry News: நவம்பர் 20, 2026 புதுச்சேரி முக்கியச் செய்திகள்

புதுச்சேரி ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு, கடலில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு, ₹3 லட்சம் ஆன்லைன் மோசடி மற்றும் ஜிப்மர் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட புதுச்சேரியின் இன்றைய முக்கியச் செய்திகளின் முழுத் தொகுப்பு.. (மேலும் படிக்க)

20 Nov 2026 15:06 IST

Tamil Nadu News: நெருக்கடியில் அமைச்சர் எஸ். கீர்த்தனா... ராஜினாமா செய்வாரா?

தமிழகத்திற்கு வரவிருந்த ₹1,614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்ற விவகாரத்தில் 15 அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இப்போது, இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்றுத் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. (மேலும் படிக்க)

20 Nov 2026 15:04 IST

South Western Railway: ரயில் பயணிகள் நோட் பண்ணுங்க!!

தென்மேற்கு ரயில்வே (South Western Railway), மொத்தமாக அல்லது குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக, ஒரே நேரத்தில் பலருக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிதாகிவிட்டது. புதிய விதிகளின் படி, ஒரு குழுவிற்காக முன்பதிவு செய்யக்கூடிய பெர்த்துகளின் (இருக்கைகள்/படுக்கைகள்) எண்ணிக்கையில் இனி எந்தக் கட்டுப்பாடும் இருக்காது... (மேலும் படிக்க)

20 Nov 2026 14:07 IST

Thiruparankundram Case Updates: திருப்பரங்குன்றம் வழக்கு அப்டேட்

வரும் நவ. 24ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று ஒரு முறை மட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனை உடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. (மேலும் படிக்க)

20 Nov 2026 12:40 IST

8th Pay Commission Update: சம்பளம் எவ்வளவு உயரும்?

சம்பள உயர்வில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய இடம் உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்படக்கூடும் என கணிப்புகள் உள்ளன. எனினும், ஊழியர் சங்கங்கள் 3.0 முதல் 3.83 வரையிலான ஃபிட்மென்ட் ஃபாக்டரை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளன... (மேலும் படிக்க)

20 Nov 2026 12:35 IST

O.M Movie Review: தனுஷின் ஓ.ம் சுமாரா? சூப்பரா?

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி உள்ள ஓம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
 

20 Nov 2026 12:26 IST

Cauvery Row News Tamil: - தமிழக கோரிக்கை நிராகரிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிடம் இருந்து 11 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. (மேலும் படிக்க)

20 Nov 2026 12:06 IST

OM Movie Review: ஓம் விமர்சனம்: விறுவிறுப்பா? இல்ல ஏமாற்றமா?

2015-ஆம் ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஓம் ஆபரேஷன் மோல் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பு முதல் இசை, திரைக்கதை வரை.. (மேலும் படிக்க)

20 Nov 2026 11:44 IST

tamil nadu fertility care centres : குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

tamil nadu fertility care centres : தமிழகம் முழுவதும் 30 அரசு மருத்துவமனைகளில் சித்தா கருத்தரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

20 Nov 2026 11:43 IST

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu government scholarship : ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பாக, இனி OTR பதிவு மற்றும் முக அங்கீகாரம் இல்லையென்றால் கல்வி உதவித்தொகை கிடையாது என அரசு அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
 

20 Nov 2026 11:34 IST

CSIR NPL Recruitment 2026: CSIR NPL பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

புது தில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் - தேசிய இயற்பியல் ஆய்வகம் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்குவது), 'Rectt./05/2026' என்ற விளம்பர அறிவிப்பின்படி, 25 'மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்' (Multi Tasking Staff) பணியிடங்களுக்கு இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்கள் 23 டிசம்பர் 2026 அன்று அல்லது அதற்கு முன்பாகச் சென்றடைய வேண்டும். காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது... (மேலும் படிக்க)

20 Nov 2026 11:27 IST

Kolathur Bypoll News: கொளத்தூரில் பின்வாங்கும் ஸ்டாலின்?

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைந்த நிலையில், அத்தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில், கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக வட்டாரத்தில் இருந்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

20 Nov 2026 11:08 IST

Tamil Nadu Data Leak: ஆந்திராவுடன் வெடிக்கும் தொழில்முறை போர்

நாட்டிற்குள் முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி, தற்போது தமிழ்நாட்டிற்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் வெறும் பெருநிறுவன முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியைத் தாண்டி, பணியாளர்களைத் தன்பக்கம் இழுத்தல் (poaching) மற்றும் ரகசியத் தகவல்களைக் கசியவிடுதல் போன்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'கைடன்ஸ்' (Guidance) மற்றும் ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) ஆகியவற்றிற்கு இடையிலான இந்த மோதல், அரசியல் பரிமாணத்தையும் பெற்றுள்ளது... (மேலும் படிக்க)

20 Nov 2026 11:07 IST

EPFO CBT Meeting: PF தொகை எடுப்பதில் புதிய நடைமுறை

EPF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி!! பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) பணம் எடுப்பதற்கான விதிகளைத் தளர்த்தியுள்ளது. நேற்று நடந்த மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன... (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES