• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: தீவிர புயலாக வலுப்பெற்றது அக்வான்.. திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு!
Live Now

Tamil News LIVE: தீவிர புயலாக வலுப்பெற்றது அக்வான்.. திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு!

Tamil News LIVE Updates: அக்வான் புயல் எச்சரிக்கையால் சென்னையில் கனமழை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு, சவரனுக்கு ரூ.2,040 குறைந்த தங்கம் விலை மற்றும் சிஎஸ்கே அணியின் மெண்ட்டாராக தோனி பொறுப்பேற்பு. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்!

Written ByR Balaji
Published: Nov 18, 2026, 10:17 IST|Updated: Nov 18, 2026, 15:43 IST
joinshare
Tamil News LIVE: தீவிர புயலாக வலுப்பெற்றது அக்வான்.. திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு!
18 Nov 2026 15:28 IST
share

Tamil Nadu Rain Forecast: கார்த்திகை தீபத் திருநாளன்று மழை

கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்களாலும், ஈரப்பதம் அதிகரிப்பதாலும், கிழக்கு திசை அலைகளின் (easterly wave) செயல்பாட்டாலும், நவம்பர் 24–25 தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை, சாரல் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது... (மேலும் படிக்க)

18 Nov 2026 14:43 IST

TTV Dhinakaran News: அதிகார வரம்பை மீறும் தவெக நிர்வாகிகள்; டிடிவி தினகரன் கண்டனம்

தேனி சோத்துப்பாறை அணையில் அதிகாரிகளின் அனுமதியின்றி தண்ணீர் திறந்ததாக குற்றச்சாட்டு. காவல் நிலைய ஆய்வு வீடியோவும் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தவெக தலைமையிடம் விளக்கம் கோரும் குரல்கள் அதிகரித்து வருகின்றன... (மேலும் படிக்க)

18 Nov 2026 13:54 IST

தமிழ்நாடு மின்தடை!

தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 19) வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
 

18 Nov 2026 13:26 IST

Nvidia Jensen Huang News: ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO ஆக நியமிக்க மறுப்பு

Nvidia இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO ஆக நியமிக்க மாட்டோம் என நிர்வாக சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு விசாரணை, Megaspeed சர்ச்சை, அமெரிக்க காங்கிரஸ் நேர்காணல் என பரபரப்பாகும் Nvidia விவகாரத்தின் முழு விவரம் அறிய.. (மேலும் படிக்க)

18 Nov 2026 12:27 IST

EPFO CBT Meeting: நவம்பர் முக்கிய கூட்டம்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நாளை பல முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) நவம்பர் 19, 2026 அன்று புது தில்லியில் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.... (மேலும் படிக்க)

18 Nov 2026 12:24 IST

Tamil Nadu Rain Alert Today (18 November 2026) | அக்வான் புயல் புதிய அப்டேட்

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பதை அறிய.. (மேலும் படிக்க)

18 Nov 2026 11:01 IST

8th Pay Commission Update: ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய அளவிலான ஓய்வூதிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் தற்போதைய அடிப்படை ஓய்வூதியம் ₹25,000 என்று வைத்துக்கொண்டால், பயன்படுத்தப்படும் ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பொறுத்து, அது ₹52,500 முதல் ₹68,750 வரை மாறக்கூடும். அதேபோல், ₹50,000 அடிப்படை ஓய்வூதியம் கொண்டவர்களுக்கு அது ₹1.05 லட்சம் முதல் ₹1.37 லட்சம் வரையிலும், ₹75,000 அடிப்படை ஓய்வூதியம் கொண்டவர்களுக்கு அது ₹1.57 லட்சம் முதல் ₹2.06 லட்சம் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது... (மேலும் படிக்க)

18 Nov 2026 11:00 IST

Thiruparanjundram Deepathoon Row: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் கோயில்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடக்கும். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு கால நடைமுறையை மாற்றக் கூடாது என அரசு தரப்பு வாதிட்ட நிலையில் விசாரணை இன்றும் நடைபெறவுள்ளது... (மேலும் படிக்க)

18 Nov 2026 10:58 IST

Jobs Update: ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் காலியாக உள்ள 3,941 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்புவதையும், கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோக பராமரிப்பை வலுப்படுத்துவதையும் இந்த ஆட்சேர்ப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது... (மேலும் படிக்க)

18 Nov 2026 10:42 IST

Rain Alert: அக்வான் புயல்.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று நவம்பர் 20ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் ஆந்திராவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

18 Nov 2026 10:41 IST

TN Politics: ராகுல் காந்தியிடம் பேச தவிர்த்த ஸ்டாலின்!

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுக்க ராகுல் காந்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் ஸ்டாலின் அதனை தவிர்த்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
 

18 Nov 2026 10:40 IST

IPL Update: ”CSK இந்த 4 வீரர்களை குறிவைக்க வேண்டும்”

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தான் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில், ஐபிஎல் மினி ஏலம் குறித்து சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களுக்கு குறி வைக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார். குறிப்பாக அவர் மூன்று வீரர்களை குறிப்பிட்டுள்ளார். (மேலும் படிக்க)

18 Nov 2026 10:36 IST

Gold Rate: தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 255, சவரனுக்கு ரூ. 2040 சரிந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 12,215க்கும் ஒரு சவரன் ரூ. 97,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

18 Nov 2026 10:35 IST

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்!

இன்று (நவம்பர் 18, 2026) புதன்கிழமை, கார்த்திகை 02 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இங்கே! (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

2

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

3

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

4

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

5

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அக்வான் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2040 குறைந்து ரூ. 97,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர் சிஎஸ்கே அணியின் மெண்ட்டாராக பொறுப்பேற்றுள்ளார். மேலும், அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.