SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவாகரத்து, வங்கக்கடலில் உருவாகிறது அக்வான் புயல்.. முதல்வர் விஜய் டெல்லி பயணம்!

Tamil News LIVE Updates: வங்கக்கடலில் இன்று உருவாகிறது அக்வான் புயல், முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்!

Written By R Balaji
Published: Nov 16, 2026, 09:24 IST | Updated: Nov 16, 2026, 16:57 IST
Join

வங்கக்கடலில் இன்று (நவம்பர் 16, திங்கள்கிழமை) உருவாகும் அக்வான்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் சிரமமின்றி அய்யப்பனை தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
 

16 Nov 2026 16:45 IST

Aadhav Arjuna Daisy Martin Split: பெரியம்மா திலகவதி IPS சொன்னது என்ன?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி மார்டின் தங்கள் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்ததிலிருந்து இந்த பிரிவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பிரிவின் பின்னணி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா விளக்கம் அளித்துள்ளார்... (மேலும் படிக்க)

16 Nov 2026 15:28 IST

Kulgam Encounter News: ஜம்மு காஷ்மீர் குல்காமில் என்கவுன்டர்

குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய முற்றுகை மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இதில் நவம்பர் 11-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய லத்தீப் பட் மற்றும் மேலும் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். (மேலும் படிக்க)

16 Nov 2026 14:57 IST

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகும் புயல் நவம்பர் 20 ஆம் தேதி ஆந்திரக் கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க உள்ள நிலையில், நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. (மேலும் படிக்க)
 

16 Nov 2026 14:54 IST

Bilkis Bano Verdict News Tamil: பில்கிஸ் பானு வழக்கில் மீண்டும் திருப்பம்

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற பிபின்சந்த் கனையாலால் ஜோஷி மற்றும் பிரதீப் ராமன்லால் மோதியா ஆகிய இருவருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுடன், அவர்களின் ஆயுள் தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீடு தொடர்ந்து நடைபெறும் நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது... (மேலும் படிக்க)

16 Nov 2026 14:30 IST

தமிழ்நாடு மின்தடை

தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 17, செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

16 Nov 2026 13:53 IST

Nvidia News Tamil: ஜென்சன் வெளியேறினாரா? Nvidia எதிர்காலம்?

AI உலகின் மிகப்பெரிய சக்தியாக திகழும் Nvidia நிறுவனம் எதிர்பாராத சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. நிறுவனர் மற்றும் CEO ஜென்சன் ஹுவாங் தொடர்பான குற்றச்சாட்டுகள், சீனா தொடர்பான விவாதங்கள், பங்கு சந்தை சரிவு மற்றும் Nvidia-வின் எதிர்காலம் குறித்த கேள்விகள் முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் Nvidia-வின் அடுத்த கட்டம் என்ன? (மேலும் படிக்க)

16 Nov 2026 13:05 IST

Minister Aadhav Arjuna: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவாகரத்து?

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் ஆகியோர், 14 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக டெய்சி மார்ட்டின் திங்கள்கிழமை அறிவித்தார்... (மேலும் படிக்க)

16 Nov 2026 12:44 IST

Jobs Update: எக்ஸிம் வங்கியில் வேலை

எக்ஸிம் வங்கி (Exim Bank) நடத்தும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குச் சிறந்த ஊதியம் வழங்கப்படும். 'மேனேஜ்மென்ட் டிரெய்னி' (Management Trainee) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, ஓராண்டு பயிற்சி காலத்தில் மாதம் ₹65,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அவர்கள் 'டெபுடி மேனேஜர்' (Deputy Manager) பணியிடத்தில் நியமிக்கப்படுவார்கள்... (மேலும் படிக்க)

16 Nov 2026 11:53 IST

Nvidia CEO Controversy: மீண்டும் CEO ஆகிறாரா ஜென்சன் ஹுவாங்?

என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியாக ஹுவாங்கை மீண்டும் கொண்டுவரக் கோரும் மனுவை எலான் மஸ்க் ஆதரிக்கிறார். ஒரு சீன உளவாளியுடனான தொடர்பு குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, மாபெரும் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைவர் பதவி விலகிய சில நாட்களுக்குப் பிறகு, ஹுவாங்கை மீண்டும் என்விடியாவிற்குத் திரும்ப வைக்க மஸ்க் தனது ஆதரவை அளித்துள்ளார்.... (மேலும் படிக்க)

16 Nov 2026 10:28 IST

8th Pay Commission Update: எக்கச்சக்கமாய் அதிகரிக்கும் ஓய்வூதியம்!

8வது ஊதியக் குழு எடுக்கும் முடிவுகளை, தகுதியுள்ள தொழிற்சங்கங்கள், சங்கங்கள், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த கவனத்துடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர். ஓய்வூதியதாரர்களும் பல வித கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme - OPS) கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.. (மேலும் படிக்க)

16 Nov 2026 09:29 IST

ஜெம் வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது!

ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஓட்டுநர் பெருமாள் என்ற பாலாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். (மேலும் படிக்க)
 

16 Nov 2026 09:28 IST

IND vs NZ 1st Test: இந்தியா பிளேயிங் 11!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை நவம்பர் 19 ஆம் தேதி விளையாட இருக்கிறது. இப்போட்டியில் இந்தியாவின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)
 

16 Nov 2026 09:27 IST

Akvan Cyclone News: இன்று உருவாகும் அக்வான் புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்திற்கு புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

16 Nov 2026 09:26 IST

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளை சம்பவத்தில், நிஷாந்த் எவ்வாறு தனி ஒருவராக செயல்பட்டு நகைகளை திருடினார் என்பதை விளக்கும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். கடைக்குள் நுழைந்தது முதல் கொள்ளையை முடித்துவிட்டு தப்பி சென்றது வரையிலான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. (மேலும் படிக்க)
 

16 Nov 2026 09:25 IST

இன்றைய ராசிபலன்!

இன்று (நவம்பர் 16) திங்கள்கிழமை, ஜப்பசி 30 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES