செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுபஸ்ரீ. 19 வயதான இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வீட்டில் தடுக்கி விழுந்ததில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. புத்தூர் கட்டு போட்டும் வலி குறையாததால் செப்டம்பர் 21-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
22-ம் தேதி கைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஒரு நாள் கழித்தே மாணவி கண் விழித்துள்ளார். பின்னர் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளனர். இதனிடையே, திடீரென நுரையீரல் தொற்று என கூறி 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மீண்டும் அறுவை