கடந்த 5 ஆண்டுகளாக ஒரே கப்பலுடன் இயங்கி வந்த கார்டெலியா க்ரூஸஸ் நிறுவனம், தற்போது 'கார்டெலியா ஸ்கை' அறிமுகத்துடன் இரட்டைக் கப்பல் நிறுவனமாக வளர்ந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில் 1500 ட்ரோன்கள் மூலம் கண்கவர் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இந்தக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடல் பயண விரும்பிகளுக்கு இது ஒரு புதிய சொகுசு அனுபவத்தைத் தரும்.