இந்தியாவின் கடல் சுற்றுலாத் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது. கார்டெலியா குரூஸ் நிறுவனத்தின் இரண்டாவது சொகுசுக் கப்பலான ‘கார்டெலியா ஸ்கை’, மும்பை வந்தடைந்துள்ளது. சுமார் 848 அடி நீளம், 12 தளங்கள், 2,404 பயணிகள் பயணிக்கும் திறன் எனப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் சேவையை அக்டோபர் 23, 2026 முதல் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பயணிகளைக் கவரும் வகையில், 1,000-க்கும் மேற்பட்ட அறைகள், 10 உணவகங்கள், 11 மதுக்கூடங்கள், இரண்டு நீச்சல் குளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநில உணவு வகைகள் மட்டுமின்றி, இத்தாலிய மற்றும் ஜப்பானிய உணவுகளையும் பயணிகள் சுவைக்கலாம். பொழுதுபோக்குக்காக 930 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திரையரங்கம், நேரடி கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி மையம்,