சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முதலமைச்சர் விஜயின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை, மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம், செயல்பாடு மற்றும் எதிர்கால விரிவாக்கப் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து, வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், விமானப் பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்குப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நவீன விமான