இன்றைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பலருக்கு முடி உதிர்வு அதிகம் இருக்கிறது. அதற்கு என்னென்ன காரணம், அதை தடுத்து முடி உதிர்வை தடுப்பது எப்படி? பொடுகுத் தொல்லையை சரி செய்வது எப்படி? என்பது குறித்து பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
‘பொடுகுத் தொல்லை 2-3 காரணங்களால் வருகின்றது. முக்கியமாக சுத்தமில்லாமல் இருப்பதால் பொடுகுத் தொல்லை வரக்கூடும். ஷாம்பூ போடும்போது மேலோட்டமாக போடக்கூடாது. ஸ்கால்ப், அதாவது மண்டை வரை சுத்தம் செய்ய வேண்டும். ஸ்கால்பில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இன்று கையில் நுரை வந்தாலே சுத்தமானதாக நினைக்கிறார்கள். பொடுகுத் தொல்லை ஏற்படுவது சரும பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும்.
மேலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்கும். இவை எல்லாம் ஒன்றோடு