இந்தியாவில் மருத்துவக் கருவிகள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. சென்னைக்கு அருகே உள்ள ஒரகடம் பகுதியில், மஹிந்திராவின் ஆரிஜின்ஸ் தொழிற்பூங்காவில் தனது முதல் இந்தியத் தொழிற்சாலையை அமைத்துள்ள இந்நிறுவனம், அங்கு ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. சுமார் 24 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில், தற்போது 5 உற்பத்திப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவிகள் முதற்கட்டமாக இந்தியச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளன. இதற்கிடையே, 2028-ஆம் ஆண்டுக்குள் சென்னையில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை தற்போதைய அளவிலிருந்து 10 மடங்கு அதிகரிக்க, ஓம்ரான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்