சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஒரு மிக முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நகரின் மூன்று முக்கியச் சாலை வழித்தடங்களை நவீன வசதிகளுடன் கூடிய "மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக" (Model Urban Mobility Corridors) மேம்படுத்த CUMTA திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) தயாரிக்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. தரமணி இணைப்புச் சாலை , மர்மலாங் பாலம் முதல் வாலாஜா சாலை வரையிலான பகுதி (Marmalong Bridge to Wallajah Road), மற்றும் ஜி.எஸ்.டி சாலை ஆகிய மூன்று முக்கியச் சாலைகளே இந்த முதற்கட்ட மாற்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், சாலைகளை வெறும் வாகனப்