பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் வெற்றியாளர் தான் முத்துக்குமரன். இவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் எனும் பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது குறித்து 4 நிமிடத்திற்கும் மேலான வீடியோவை வெளியிட்ட அவர், அதனை சில மணி நேரங்களில் டெலிட் செய்து விட்டார். அந்த வீடியோவில் அவர் பேசிய விஷயங்கள் என்ன? முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் என்ன? இது குறித்து தெளிவாக இங்கு தெரிந்து கொள்வோம்.
பிக்பாஸில் நுழைவதற்கு முன்பு முத்துக்குமரன் ஒரு சேனலில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு பல்வேறு பிரபலங்களையும் பேட்டி எடுத்து வந்தார். இதேபோல இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் தான், வஹிதா அக்தர். இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம்