மழைக்காலங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சலால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இந்த இக்கட்டான சூழலில், டெங்கு பாதிப்பு வந்த பிறகும், வராமல் தடுக்கவும் சித்த மருத்துவத்தின்படி என்ன செய்ய வேண்டுமென பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனைகள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன. "டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் எங்களிடம் வந்தால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இது வரக்கூடாது என நினைத்தால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் இஞ்சி துண்டை கடித்து மெல்வது நன்மை பயக்கும். அதோடு 4 திப்பிலி வாயில் போட்டு கடித்து விழுங்குவதும் நல்லது. டெங்கு காய்ச்சல் வரக்கூடாது என நினைப்பவர்கள் இதை செய்யலாம்.