மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகத்தில் உச்சகட்ட மின்தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாலும், மத்திய தொகுப்பிலிருந்து 3,000 மெகாவாட் மின்சாரம் வராததாலும், மின்வெட்டைத் தவிர்க்க வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் கொள்முதல் செய்ய குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கையாகப் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மின்வாரியம் மாவட்ட வாரியாக மீட்புக் குழுக்களைத் தயார்செய்து மாதிரி ஒத்திகைகளை நடத்தியுள்ளது. காற்றாலை வழித்தடப் பகுதிகளில் சோலார் அமைக்க இனி அனுமதி வழங்கப்படாது; பேட்டரி சேமிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். மேலும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் ஒதுக்கீடு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்தே வருகிறது. ஆனால் செவிலியர் போராட்டத்தை