பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் தங்கி பானி பூரி விற்று பிழைத்து வந்தனர். இவர்களுக்கு 6 வயதில் சிறுமியும் உள்ளார். இந்நிலையில், நேற்று விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மொழிப் பிரச்சினையால் மருத்துவர்கள் கூறிய தகவலை பெற்றோரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, உறவினருக்கு சிகிச்சை அளிக்க அதே மருத்துவமனைக்கு வந்த தாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், சிறுமியின் நிலையை அறிந்து பெற்றோருக்கு உதவியதாக கூறப்படுகிறது. சிறுமியிடம் பேசியபோது, தன்னை