இந்தியாவின் கனரக வாகனத் துறையில், கோவையைச் சேர்ந்த Propel Industries சத்தமில்லாமல் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. 45, 60, 70 என தொடங்கி, தற்போது 90 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட மின்சார லாரிகளை இந்த கோவை நிறுவனம் உருவாக்கியுள்ளது. 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Propel Industries, ஆரம்பத்தில் மின்சார வாகன நிறுவனமாக இல்லை. சுரங்கம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கான கல் நொறுக்கும், பிரிக்கும் மற்றும் சுத்திகரிக்கும் இயந்திரங்களை தயாரிப்பதில்தான் தனது பயணத்தை தொடங்கியது. பல ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான சுரங்கம் மற்றும் குவாரி நிறுவனங்களுடன் இணைந்து வளர்ந்த இந்த நிறுவனம், தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்து 100க்கும் அதிகமான இயந்திரங்களை நிறுவியுள்ளது. இதன்பின்னர், 2018ஆம் ஆண்டு மின்சார வாகன தொழில்நுட்பத்தை