சென்னையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "தேர்தல் ஆணையம் மோசடியாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறது. ஆகவே அரசியல் சாசனம் இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய வாக்குரிமையை பாதுகாப்பது என்கிற அந்த போராட்டத்தில் ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய, வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பக்கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து செயல்படுவதற்கு முன்வர வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும், இந்த கோரிக்கையில் உடன்பாடு உள்ள அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் சௌமியா அன்புமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் இரண்டு பேருமே சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதை வதந்தி என்று சொல்லியிருக்கிறார்கள். இது வதந்தி என்றே நாங்களும் நம்புகிறோம். பொதுவாக தமிழக