முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர். அக்டோபர் 1 முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக LPG சிலிண்டரை பெற... ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்திருக்க வேண்டும். மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் தகவல்படி, ஏற்கனவே பெரும்பாலான LPG வாடிக்கையாளர்கள் இந்த சரிபார்ப்பை முடித்துவிட்டனர். ஏற்கனவே முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றான யுபிஐ பரிவர்த்தனைகளிலும் அக்டோபர் மாதத்தில் முக்கிய மாற்றம் வர உள்ளது. அக்டோபர் 15 முதல், 2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை Merchant Discount Rate எனப்படும் MDR கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நிலையான வைப்புத்தொகையான FD தொடர்பான விதிகளிலும் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சொத்து வாங்குபவர்களுக்கு