பொதுவாக ஒரு முதலீட்டில் இழப்பு ஏற்பட்டால், அதிலிருந்து பணத்தை வெளியே எடுத்து மற்றொரு முதலீட்டில் போடுவதுதான் முதலீட்டாளர்களின் வழக்கம். ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாக மாறியிருக்கிறது. உலகச் சந்தையில் பங்குகள், தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி, பத்திரங்கள் எனப் பல்வேறு முதலீட்டுச் சந்தைகளும் ஒரே நேரத்தில் அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் எந்தச் சந்தைக்குச் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, பெரும் முதலீட்டாளர்கள் இப்போது லாபத்தைப் பெருக்குவதைக் காட்டிலும், கையில் இருக்கும் முதலீட்டைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, பங்குகள், தங்கம், கிரிப்டோ உள்ளிட்ட முதலீடுகளிலிருந்து பணத்தை வெளியே எடுத்து, ரொக்கமாக வைத்துக்கொள்ளும் உத்தியைக் கையாளுகின்றனர். அப்படியென்றால், முதலீட்டுச் சந்தையிலிருந்து பணம் வெளியேறுகிறதா..? அப்படியில்லை..! இது சந்தையைக் கைவிடும் முடிவாக இல்லாமல், சரியான