ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த கீதா கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த பத்து சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. அன்று மாலை வீடு திரும்பிய கீதாவின் பேரன், பாட்டி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாலாஜாபேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு