தமிழ்நாடு அரசின் 'மண்ணின் மகள்' திட்டத்தின் கீழ், நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதனுடன் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணத்தில் 100% விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முந்தைய பெயர் நன்னிலம். இத்திட்டத்தில் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கலாம். விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வாங்கும் நிலம் பிற வகுப்பினருடையதாக இருக்க வேண்டும்; மேலும் அதை 10 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது. தகுதியுடையவர்கள் தாட்கோ (TAHDCO) இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட தாட்கோ