முதலமைச்சர் விஜய் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், தமிழ்நாடு நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஒரு சூப்பர் 'குட் நியூஸ்' வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 8 மாநகராட்சிகள் மற்றும் 51 நகராட்சிகள் என மொத்தம் 59 உள்ளாட்சி அமைப்புகளில், 64 புதிய விளையாட்டு உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்பைத் துறை வெளியிட்டுள்ளது
16-ஆவது மத்திய நிதிக் குழுவின் மானிய நிதியின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு திட்டத் தொகுப்புக்கும் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 32 லட்சம் ரூபாய் வரை மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான ஒப்பந்ததாரர்கள் நவம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 9-ஆம் தேதி வரை