சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை 7.7 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது. இந்த 3 மாதங்களில் பயணிகள் போக்குவரத்து சுமார் 11 முதல் 12.7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பயணிகள் எண்ணிக்கை 3.08 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் தற்போது 3 முனையங்கள் செயல்பட்டு