சென்னையில் நடைபெற்ற 6-வது BSG மகளிர் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தேசிய விருது பெற்ற நடிகையும், இயக்குநருமான ரேவதி, பெண்கள் சமூக மாற்றத்தின் செயலாற்றல் மிக்க முன்னோடிகளாக மாறவேண்டும் என வலியுறுத்தினார்.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைப் பெண்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கிற்கு ஏற்ப, பெண்களின் நூற்றாண்டு என்னிடமிருந்து தொடங்குகிறது; விழிப்புணர்விலிருந்து செயல்பாட்டிற்கு என்ற தலைப்பில் BHARATH SOKA GAKKAI எனும் BSG தொண்டு நிறுவனம் சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. BHARATH SOKA GAKKAI இயக்குநர் ராஷி அஹுஜா, தேசிய விருது பெற்ற நடிகையும், இயக்குநருமான ரேவதி, கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காகச் செயல்படும் யெயின் உடான் நிறுவனத்தின் நிறுவனர் வேதிகா அகர்வால், பெண்களின்