சிலருக்கு முகம் முழுவதும் சீராக இல்லாமல் பள்ளம் மேடாக இருப்பதுண்டு. சிலருக்கு முகம் முழுதும் கட்டிகள் இருப்பதுண்டு. இவற்றை எப்படி சரி செய்வது? 'இந்த பிரச்சசைகளுக்கு சருமத்தில் இருக்கும் சில பிரச்சனைகள்தான் காரணம். இவற்றை சித்த மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும். இதற்கு பெரும்பாலும் கொழுப்புள்ள உணவுகளை கொடுத்து, முகத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்வோம். ஒரு நோயாளிக்கு இப்படி சிகிச்சை அளித்து, சுமார் 12 கிலோ அதிகரித்து, இந்த பிரச்சனையை சுமார் 50% வரை சரி செய்தோம். பிரச்சனை சரியானவுடன் எடையை குறைத்தோம். சிலருக்கு இந்த பிரச்சனை இயற்கையாகவே இருக்கும். சிலர் பயன்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள் காரணமாகவும் இந்த பிரச்சனை வருவதுண்டு. இப்படிப்பட்ட தோல் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என எதுவும் கிடையாது. நான்